×

கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியான பிறகே ஊருக்குள் வரும் புதிய நபர்களை வீடு செல்ல அனுமதிக்க வேண்டும்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தமிழகத்துக்கு வந்துள்ளனர். ஆனால், அவர்களில் தற்போது வரை 1 லட்சம் பேர் மட்டுமே கண்டறியப்பட்டு, 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் நிலை குறித்து தினமும் அதிகாரிகள் கேட்டறிந்து வருகின்றனர். இந்த நிலையில் மார்ச் 1ம் தேதிக்கு பிறகு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்துள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.இதற்காக, ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் புதிதாக ெவளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து யாரேனும் வந்துள்ளனரா என்பதை கண்டறியும் வகையில் வீடு, வீடாக சென்று உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் புதிதாக யாரேனும் ஊருக்குள் வந்து இருப்பது தெரிய வந்தால் முதலில் அவர்களது உடல் நிலையை பரிசோதிக்க மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவர்களது ரத்த மாதிரியை பரிசோதனை செய்த பிறகு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டால் மட்டுமே அவர்களை வீட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும். அதுவரை அவர்களை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையெனில் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Coroners ,home , Coroners,return home ,confirmed, unaffected,Health Department Advice ,local Authorities
× RELATED அதிகாரிக்கு வந்த மர்ம இமெயில் உள்துறை...